பொதுவாக நடிகர் விஜய் அனைவரிடமும் பேசும் கேரக்டர் கிடையாது தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே கலகலப்பாக பேசுவது உண்டு. அந்த வகையில் படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் அழைக்கும் பொழுது வந்து கேமராவுக்கு முன்பு நடித்துவிட்டு மறுபடியும் கேரவனுக்கு கிளம்பி விடுவார். மதிய உணவும் கேரவனில் தனியாக சாப்பிடும் நிலையில் மதியம் 6 மணி ஆனால் வீட்டிற்கு கிளம்பி விடுவார். எனவே விஜயிடம் பழகுவது மிகவும் கடினம் என ஏராளமான நடிகைகள் பேட்டியில் கூறி இருக்கின்றனர். பொதுவாக நடிகர் விஜய் அமைதியாக யாரிடமும் பேசாமல் இருப்பது தான் அவருடைய கேரக்டர். சினிமாவில் சிறந்த நடிப்பு கலகலப்பான பேச்சு என இருந்தாலும் நிஜத்தில் மிகவும் தயங்கிய குணம் உடையவர்
எதை செய்தாலும் தயங்கி தயங்கி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். விஜய் வைத்து இயக்கிய அனைத்து இயக்குனர்களும் விஜயை பற்றி தெரியும் அவர் மிகவும் அமைதியானவர் என ஒரு கட்டத்திலேயே இயக்குனர்களும் அவருடைய கேரக்டர் இதுதான் என விட்டுவிடுவார்கள்.அப்படிதான் சமீபத்தில் லியோ படம் குழுவை விஜய் செய்த செயல் அப்செட் ஆகியுள்ளது. பொதுவாக எந்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும் படப்பிடிப்புகள் முடியும் நேரத்தில் படக்குழு ஒன்றாக இணைந்து அந்த நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அவ்வாறு பட குழுவினர்களும் விஜய் உடன் நடித்துள்ளோம்.
இது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவார்கள். இதனை புரிந்துக் கொண்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் தனது பட குழுவினர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் விஜய்க்கு கூட்டம் என்றாலே பிடிக்காது மிகவும் அலர்ஜி. அப்படி லியோ படத்தின் கடைசி நாளில் இப்படி ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் என்ன நினைத்தாரோ உடனே வீட்டிற்கு கிளம்பி விட்டாராம் அவருக்காக காத்திருந்த பட குழுவினர்கள் அனைவரும் அப்செட் ஆகியுள்ளனர்.