படுத்த படுக்கையில கண்ணீர் வடிப்பார் என நடிகர் சிங்கமுத்து வடிவேலுக்கு சாபம் விட்டிருக்கிறார். நடிகர் சிங்கமுத்து நாடறிந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருடன் நடித்துள்ள நடிகர் சிங்கமுத்து, நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிறரால் பாதிக்கப்பட்டவன் துன்பப்பட்டவன்தான் அவனது வயிற்றெரிச்சல் தீர பேசுவான்.வடிவேலுவிடம் மேனேஜராக இருந்தவர்கள் காசு முழுவதும் வருமான வரியாகச் செல்கிறது. நான் படம் எடுப்பதை தெரிந்துகொண்ட வடிவேலுவின் உடன் இருப்பவர்கள் மற்றும் தெரிந்தவர்கள்
வடிவேலுவுக்கு சாபம் அவரிடம் சென்று தனது மகனை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு சிங்கமுத்துவிடம் காசு இருக்கிறது என்றால் அவர் உங்களிடம் கொள்ளையடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கொளுத்தி போட்டனர்.இதை வடிவேலு அப்படியே நம்பினார் பாவம் அவருக்கு படிப்பறிவு கிடையாது. கேள்வி ஞானம் மட்டும் தான். அவரது கண்ணை பணம் மறைத்து விட்டது. ஒருவர் கெட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.
அதற்காக எல்லாம் வயதான காலத்தில் வடிவேலு நிச்சயம் படுத்துக் கொண்டு அழுவார். அவர் வருத்தப்படுவார். வாழ்க்கை என்றால் இதுதானா? இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் நல்லவனாகவே இருந்திருப்பேனே என்று கண்ணீர் வடிப்பார். வடிவேலுவுடன் நடித்த அனைத்து காமெடி நடிகர்களுக்குமே திறமை உண்டு. எங்கள் மீது ஏறி அவர் பெயர் சம்பாதித்து விட்டார் எனப் பேட்டி ஒன்றில் தெரித்துள்ளார்.