ஒரு வழியாக முடிவுக்கு வந்த விஜய் மகன் விவகாரம்…! அந்த ஹீரோ யார் தெரியுமா…?

விஜய் மகன்- ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகன் தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சஞ்சய் தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகர் தான் விஜய். இவருக்கு 24 வயதில் ஜேசன் சஞ்சய் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இவர் கடந்த 2000வது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார்.தன்னுடைய ஆரம்ப பள்ளி படிப்பை சென்னை முடித்த சஞ்சய் கனடாவிற்கு சென்று அங்கு மேற்படிப்பை முடித்தார். அது மட்டுமல்லாமல் திரைப்படம் தொடர்பான படிப்பையும் நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.

இறுதியாக லண்டனுக்கு சென்று அங்கு படித்து கொண்டே நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களை எடுத்து வந்தார்.ஹீரோ யார் தெரியுமா? இந்த நிலையில சஞ்சய் கோலிவுட்டிற்குள் இயக்குநராக என்றி கொடுக்கவுள்ளார். சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. தொடர்ந்து படத்தில் யாரை கதாநாயகனாக நடிக்க வைக்கப் போகிறார் என்பதனை தெரிந்து கொள்ள

பலரும் ஆவலுடன் இருந்தார்கள்.இதன்படி,சஞ்சய் படத்தில் நடிக்க ராயன் படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கமிட்டாகியுள்ளாராம். தொடர்ந்து திரைப்பட பணிகள் விரைவில் துவங்கும் என்றும், அந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ள முக்கிய கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *