தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களால் வெற்றியை கண்டவர் இயக்குனர் பாக்யராஜ். இயக்கம் தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். மகள் சரண்யா சரியான வரவேற்பு பெறாமல் படிப்பில் கவனம் செலுத்து பின் காதல் தோல்வியாக தற்கொலை வரை சென்று அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் சாந்தனு பல ஆண்டுகள் சினிமாவில் நடித்தும் போதிய வரவேற்பை பெறாமல் வந்தார்.
சமீபத்தில் சாந்தனு நடிப்பில் ராவண கோட்டம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷனுக்காக மனைவி கிகி மற்றும் பாக்யராஜுடன் இணைந்து பேட்டியளித்திருந்தார் சாந்தனு. அப்போது கிகி-யுடனான காதல் வாழ்க்கையை பற்றி பகிர்ந்துள்ளார். கிகி-யை 2 ஆண்டுகள் காதலித்து பிரேக் ஆன போது இருவரும் பேசாமல் இருந்தோம். அப்போது என் தோழியுடன் காஃபி ஷாப்பிற்கு சென்ரு பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது கிகி-யின் பாய் பிரெண்ட் எங்களை பார்த்ததோடு நான் வேறொரு பெண்ணிடம் உட்கார்ந்துள்ளதை போட்டுக்கொடுத்துவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கிகி என்னிடம் 8 ஆண்டுகள் பேசாமால பிரேக்கப்பில் இருந்தார். அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து பேச்சுலர் பார்ட்டியி பேட்ச் அப் ஆனோம் என்று சாந்தனு கூறியிருந்தார்.