‘ஐ’ பட வில்லன் சுரேஷ் கோபி மகளுக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்…! மாப்பிள்ளை யார் தெரியுமா…?

தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள, நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்… விக்ரம் ஹீரோவாக நடித்த ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர். இவரின் மகள் பாக்யாவுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் திருவனந்தபுரத்தில் உள்ள, அவரது வீட்டில் நடைபெற்றது.

இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள, மணமகன் மாவேலிக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷ்ரேயாஸ் மோகன் என்கிற தகவலை பாக்யா நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.   தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் ஸ்ரேயாஸ் ‘லோகாய் தோழர்களே..’ என கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் கோபியின் மகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே பாக்யாவின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. குருவாயூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதை தொடர்ந்து… ஜனவரி 20ஆம் தேதி திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ் கோபி மற்றும் ராதிகா தம்பதியரின் மூத்த மகள் பாக்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *