ஐயோ .. ராப் பிச்சைக்காரி…! வனிதா விஜயகுமாரின் நியூ ஹேர் ஸ்டைலை மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த வனிதாவுக்கு மூன்று திருமணம் நடந்தது.நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

மூன்றும் தோல்வியிலே முடிந்தது. அதைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.தற்போது, இவரது மகள் ஜோதிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இந்த வாரம் இவர் வெளியேறுவார் என்று மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வனிதா தன்னை பிரதிப்பின் ரசிகர் ஒருவர் தாக்கிவிட்டதாக கூறி பரப்பரப்பை எழுப்பினர்.

ஆனால், இவர் இது தொடர்பாக போலீசில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இதனால், வனிதா பொய் கூறுகிறார் என்று நெட்டிசன்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது, நியூ ஹேர் ஸ்டைல் மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் மிகவும் மோசமாக கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *