ஏற்கனவே திருமணமாக நடிகருடன் வதந்திகளை கிளப்பியவர்களுக்கு நடிகை தமன்னா சரியான பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தமன்னா. இவர் தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.மேலும் சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை 4ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பிசியாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.
படங்கள், வெப் தொடர் என தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “ஜெய்லர்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமானவரா? இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் தமன்னா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியது.
இதனை பார்த்த இணையவாசிகள் இவர்கள் ஏற்கனவே திருமணம் செய்து விட்டார்கள் என்ற செய்தியை பரப்பி விட்டார்கள். இது குறித்து பதிலளித்த தமன்னா,“ குறித்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ” என சிரித்தப்படி கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ திருமண நடக்கும் வரை இப்படியான வதந்திகள் வைரலாகுவது வழமை.” என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.