என் தங்கச்சி ஸ்ரீதேவி ஒரு ஃப்ராடு…! பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் வனிதா…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பிக் பாஸ் வனிதா வாயை திறந்தாலே சர்ச்சை என்ற ஒரு காலம் இருந்தது. தற்போதும் பல்வேறு விஷயங்களை தன்னுடைய வாழ்க்கை குறித்தான பல்வேறு ரகசியங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை பிக்பாஸ் வனிதா. இந்நிலையில், தற்போது சினிமாவிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் தன்னுடைய தங்கை ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி குறித்தும் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.நான் என்னுடைய தங்கைகளை மிகவும் மிஸ் பண்றேன். ஆனால் என்னுடைய குழந்தைகள் மூலம் அது அந்த குறை எனக்கு இல்லாமல் இருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து தன்னுடைய தங்கைகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி குறித்து பேசிய வனிதா சின்ன வயதிலிருந்து என்னுடைய அம்மா மஞ்சுளா என்னையும் என் தங்கச்சி ப்ரீத்தாவையும் அடிச்சு தான் வளர்த்தாங்க.ஆனா கடைசி தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் என் அம்மா எப்பவும் அடிக்க பயப்படுவார். அதற்கு என்ன காரணம் என்றால் குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீதேவிக்கு கடுமையாக கோபம் வரும். கோவம் வந்தால் ரூமுக்குள் சென்று கதவை பூட்டி தாள்ப்பாள் போட்டுக் கொள்வார்.

கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் எடுத்து போட்டு உடைத்து விடுவார். சின்ன வயதிலிருந்து ஸ்ரீதேவி சரியான பிராடு.. நல்லா டிராமா பண்ணி எல்லாரையும் ஏமாத்திடுவா.. அதனாலே ஸ்ரீதேவி மட்டும் யாரும் அடிக்கவே மாட்டாங்க. அவர்தான் எங்கள் வீட்டில் அனைவருக்கும் செல்லம் என்று பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகை வனிதா பிக்பாஸ் வனிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *