கடந்த 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை முமைத் கான். ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலிலும், விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு, கந்தசாமி, மம்முட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து உள்ளார். நடிகை முமைத் கான் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போனதால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். பின் இடையில் இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
படங்கள் இல்லாததால் வீட்டில் இருந்து உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். திரைப்படங்களில் தென்படாத முமைத் கான் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த தாறுமாறாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ முமைத் கான் பார்ப்பதற்கு சற்று குண்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..