என் கூட அத பண்ணணுனா வந்து முயற்சி பண்ணு…! ரசிகரின் அத்துமீறிய கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி…!

பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு போன்று பல மொழிகளில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படத்தை சிலர் உருவ கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழவிடு” எனக் குறிப்பிட்டு அறிக்கையை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காஜல் அகர்வால், ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ரசிகர் ஒருவர், உங்களை லவ் பண்றேன், நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க ரிப்ளைக்கு வெயிட் பண்றேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு காஜல் அகர்வால் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க..மிகவும் எளிதாக இது நடந்து விடாது என்று பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *