தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரோபோ சங்கர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி இருக்கும் நிலையில் தொடர்ந்து மனைவியோடு சேர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில் அவரைப் பேட்டி எடுத்த நடிகை வனிதா ரோபோ சங்கர் உடைய நிலைமை தான் என்னுடைய அம்மாவுக்கும் இருந்தது என்று கூறியிருக்கிறார். அதோடு என்னுடைய அம்மாவுக்கு இரண்டு முறை அந்த பாதிப்பு ஏற்பட்டது.
என்றும் உடல்நிலையில் எல்லோரும் அக்கறையாக இருக்க வேண்டும் என்றும் வனிதா வேண்டுகோள் வைத்து இருக்கிறாரார்.ரோபோ சங்கர் ஆரம்பத்தில் பல ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பலருடைய குரலில் பேசி அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவர் பிரபலம் அடைந்த பிறகு தான் சிவகார்த்திகேயன் போன்றோர் கூட பிரபலமடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையிலும் பல முன்னணி நடிகர்களோடு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருடைய உடல் நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் கவனமாக இருக்கும் ரோபோ சங்கர் ஒரு திரைப்பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. அந்த நேரத்தில் இரண்டும் ஒன்றாக சேர்ந்ததால் ரோபோ சங்கர் திடீரென்று உடல் எடை அதிகமாக குறைந்து இருக்கிறார்.
இது ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் மருத்துவர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் தனக்குத் தந்த ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் தன்னால் மீண்டு வந்திருக்க முடிகிறது என்று தன்னுடைய மனைவியோடு பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த மாதிரி ஒரு பேட்டியில் அவரை பேட்டி எடுத்த நடிகை வனிதாவோடு பேசிக் கொண்டிருக்கும்போது ரோபோ சங்கரின் மனைவி ரோபோ சங்கருக்கு மஞ்சகாமாலை இருந்துச்சு. அது ரத்தத்தில் கலந்து விட்டதால் தான் பெரும் பிரச்சனை ஆகிட்டு என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போ வனிதா என்னுடைய அம்மாவுக்கு இந்த பிரச்சனை இருந்தது. அதுவும் எங்க அம்மாவுக்கு ரெண்டு முறை இந்த பிரச்சனை வந்திருந்தது. அதனால் தான் அவருடைய உடல்நிலை ரொம்ப மோசமானது என்று சொல்லி இருக்கிறார். அதோடு இதை பார்த்துகிட்டு இருக்கிற யாராக இருந்தாலும் சரி உடம்புல ஒரு சின்ன பிரச்சனைன்னா அதற்கு என்ன தீர்வுனு டாக்டர்கள் சொல்றதை கேளுங்க. டாக்டர்கள் எதுவும் நம்மள பத்தி தப்பா சொல்லிடுவாங்களோனு ஹாஸ்பிடலுக்கு போவதற்கு பயப்படுறதுனால தான் பிரச்சனை கூடுதல் ஆகிறது. அதனால் யாரும் என்னை இப்படி பண்ணாதீங்க என்று வனிதா வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இதற்கு காரணம் ஆணழகன் போட்டியில் செய்த சில செயல்கள் உடல் எடையை குறைத்து மஞ்சள் காமாலை வந்தது. மேலும் சில கெட்ட பழக்கங்கள் இருந்ததால் மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் உடல் எடை குறைந்தது என்று நடிகை வனிதா எடுத்த பேட்டியொன்றில் ரோபோ சங்கர் கூறியிருந்தார். அதிலிருந்து தற்போது மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார். அப்போது பேசிய வனிதா,
என் அம்மாவுக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அதுவும் என் அம்மாவுக்கு இரண்டு முறை இந்த பிரச்சனை வந்ததால் தான் அவர் உடல் நிலை ரொம்ப மோசமாகியது என்று கூறியுள்ளார். அதனால் இந்த பிரச்சனை வந்தவுடன் யாராக இருந்தாலும் சரி உடம்புல சின்ன பிரச்சனைன்னா கூட அதற்கு டாக்டர்கள் சொல்வதை கேட்டு பயப்படாமல் அதை செய்துவிடுங்கள் என்று வனிதா தெரிவித்துள்ளார்.