தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம் பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான காயத்ரி, ஸ்டைல், விசில், பராசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் வாய்ப்பில்லாமல் 8 ஆண்டுகள் காணாமல் போனார். அதன்பின் சில பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வந்த காயத்ரி, பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.தமிழ் சினிமாவில் நடிகையாக, நடன இயக்குனரான காயத்ரி ரகுராம், சிறுது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அவர் தனது அடாவடித்தனமான நடவடிக்கையின் மூலம் மீண்டும் பிரபலமானார். சமீபத்தில் பிரபல கட்சியில் இருந்து விலகி சமுகவலைத்தளத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.பின்னர், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த அவர், உட்கட்சி பூசலின் காரணமாக கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து வெளியேறிய பின்பும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து பேட்டிகளிலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் காயத்ரி ரகுராமன் சமீபத்திய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காயத்ரி ரகுராம் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். மொட்டை அடித்துக் கொண்டு நெற்றியில் நாமத்துடன் இருக்கும் புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுள்ள காயத்ரி, ஓம் நமோ நாராயணா என்று கூறி புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram