அடடா திரைத்துறையில் எந்த பக்கம் திரும்பினாலும் இதுபற்றிய பேச்சு அதிகமாக தற்போது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த விஷயத்தைப் பற்றி தற்போது ஓப்பனாக தேவிப்ரியா கூறிய கருத்துக்கள் பலர் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அரசல் புரசலாக அல்லாமல் வெளிப்படையாகவே விஷயங்கள் இணையங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெருமளவு பேசும் பொருளாகி உள்ளது.அந்த வகையில் எந்த ஒரு நடிகையும் தற்போது நல்ல பட வாய்ப்பினை பெற வேண்டும் என்றால் படுக்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விஷயம் காட்டு தீ போல பரவி வருகிறது.
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கக்கூடிய விஷயம் தொன்று தொட்டு நடந்து வந்தாலும் அவர்களாக விருப்பப்பட்டோ அல்லது மார்க்கெட் சரிந்து போகக்கூடிய காலகட்டங்களில் அந்த நடிகைகள் இது போன்ற விஷயங்களில் தாங்களாகவே முன் வந்து தங்கள் மார்க்கெட்டை சரி கட்ட அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள். ஆனால் இது திரையுலகில் அறிமுகமாகவும், அதிகளவு வாய்ப்புகளை பெறுவதற்காகவும் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட்களை சில பெரிய மனிதர்கள் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்த தான் மீடூ புகார்கள் அதிக அளவு சினிமா துறையில் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பெண்கள் அவர்கள் சந்தித்து வந்த பாலியல் வன்புணர்வை தற்போது வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இப்படி பகிர்ந்தாளாவது மாற்றம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என கூறலாம்.அந்த வகையில் பிரபல நடிகை தேவிப்ரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் அவர் சமீபத்தில் தனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும், அந்த போன் காலில் பெங்களூரில் இருந்து ஒரு நபர் பேசுவதாக ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். மேலும் அவர் பேசும் போது நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள முடியுமா? என கேட்டார். நானும் சரி வருகிறேன் என்று பதில் சொல்ல எப்போது வருவீர்கள் எனக் கேட்க நான் நிகழ்ச்சி நடக்கும் அன்று காலை வந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன் என்றேன்.அதற்கு அவர்கள் நீங்கள் நாளை காலையிலேயே வரவேண்டும் எனக் கூற, நான் எதற்கு காலையில் வரவேண்டும் என்று கேட்டேன்.
அதற்கு அவர் நிகழ்ச்சியை நடத்துபவர் ஒரு மிகப்பெரிய என் ஆர் ஐ நபர் அத்தோடு மிகப்பெரிய பணக்காரர். அவர் கொடுக்கக்கூடிய இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்குள் போனை வைத்து விட்டார்.
இந்நிலையில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த நபர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்கள் பி ஆர் ஓ அல்லது மேனேஜர் இருந்தால் கொடுங்கள் நான் அவரிடம் பேசுகிறேன் என்று கூறியதும் எனக்கு அவரது நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரிய வந்தது.
இதனை அடுத்து நானே அவரிடம் நீங்கள் நினைப்பது போல பெண் நான் இல்லை என்று கூறியவுடன் சாரிமா இனி மேல் உங்களிடம் எப்படி கேட்க மாட்டேன். மேலும் நிகழ்ச்சி தொடர்பாக விஷயங்களை மட்டுமே பேசுவேன் என்று அந்த நபர் கூறியதாக நடிகை தேவிப்பிரியா கூறியிருக்கும் விஷயம் தான் பெரிய ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. திரைத் துறையைச் சார்ந்த எல்லா நடிகைகளும் ஒரே போல இருப்பார்கள் என்று எண்ணுவது மிகவும் தவறானது. அந்த துறையிலும் நல்ல பெண்கள் என்றும் இருக்கிறார்கள் அவர்கள் எப்போதும் இது போன்ற விஷயங்களுக்கு துணை போக மாட்டார்கள் என்பது இவரது பேட்டியின் மூலம் பலருக்கும் புரிந்து இருக்கும்.