திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பல வெற்றிப்படங்களை தந்தவர். துப்பறிவாளன், அஞ்சாதே, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்தவர்.சமீபத்தில் டெவில் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த படத்தின் இயக்குநர் மிஷ்கின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மேடையில் பூர்ணா, விதார்த் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது மேடையில் மிஷ்கின் பேசியதாவது, 100 வருஷம் வாழ்கிற வாழ்க்கையில் நாம் பத்து பேரை சந்திப்போம். அதில் மகளாக, தாயாக, சகோதரி, மனைவியாக சில பெண்கள் வருவார்கள்.ஆனால் எங்கிருந்தோ ஒருத்தி வேறொரு மனுஷி வருவாள். அன்பு காட்டுவாள். அப்படி ஒருத்தி தான் பூர்ணா.
இவளை பார்க்கும்போதெல்லாம், அடுத்த ஜென்மத்துல இவ வயித்துல பிறக்கணுமுன்னு தோணும். என் படத்துல அவ இருக்கணும். அந்த நாய் சாகற வரைக்கும் நடிக்கணும். என்னையும் அவளை பத்தியும் சேர்த்து வெச்சு தப்பா பேசுவாங்க. அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. அவளுக்கு கல்யாணம் ஆனது ரொம்ப சந்தோஷமா இருந்தது.இன்னும் 5 வருஷம் நடிச்சிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல தோணுச்சு. அவங்க கல்யாணம் பண்ணிட்டு துபாய் போயிட்டாள். இங்க இருந்தாலாவது அடிக்கடி போய் பார்க்கலாம். பூர்ணா ஒரு எக்ஸ்ட்ரானரி ஆக்டர்.
ஆக்டர் அப்படீன்னா, கற்பனையான ஒரு உலகத்துல, நிஜமா வாழணும் அதுதான் நடிப்புங்கறதுக்கு டெபனீஷியன்.அப்படி சிறந்த நடிகையாக பூர்ணா இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசியிருக்கிறார். என்னதான் பிடித்தமான நடிகையாக இருந்தாலும், நெருங்கிய நட்புக் கொண்டவராக இருப்பினும், ஒரு நடிகையை ஒரு மேடையில் மீடியா முன்பு, அந்த நாய் சாகற வரைக்கும் நடிக்கணும் என்ற வார்த்தையை மிஷ்கின் பயன்படுத்தியது தவறு என, பலரும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.