தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தொழிலதிபரான சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய திருமண வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு படங்கள், வெப் சீரிஸ் என பிஸியாகிவிட்டார் ஹன்சிகா.
திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஹன்சிகா, திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு வந்துவிட்டார். இதுகுறித்து பேசிய ஹன்சிகா, 10 வயதில் இருந்து நடித்து வருகிறேன், சினிமா தான் என்னுடைய முதல் கணவர், டேக் ரெடி என்பதை கேட்பதே எனக்கு சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு வருகின்ற ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ அதே மாதிரி சோஹைல் இருப்பதாகவும், அவருடைய அமைதி மற்றும் புரிந்து கொள்ளும் தன்மை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் தங்களது காதல் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் சிலாகிக்கிறார் ஹன்சிகா.