தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி உல்லம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், சர்வம், மதராசப்பட்டினம், சிக்குபுக்கு, அவன் இவன், ராஜா ராணி, ஆரம்பம், மீகாமன், யட்சன், இஞ்சி இடுப்பழகி, அரண்மனை, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகினார். அதன்பின் தன்னைவிட 17 வயது சிறிய வயதுடைய நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் 18 பெண்கள் அவரை திருமணம் செய்ய போட்டிப்போட்டனர். ஆனால் கடைசியில் யாரையும் திருமணம் செய்யாமல் நடிஅகி சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து ஆர்யானா என்ற மகளை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார். தன்னை பற்றிய ரூமர் செய்தியை பார்த்து சிரித்தது என்ன என்று கேள்விகேட்கப்பட்டது. அதற்கு ஆர்யா, அதெல்லாம் நிறைய வந்திருக்கிறது, ரொம்ப சிரித்தது-னா, 10 வருடத்திற்கு
ஆர்யாவுக்கு கல்யாணமாகிடுச்சி. பொண்டாட்டி, 2 புள்ளைங்கள கேரளாவில் ஒளிச்சி வெச்சிருக்கான்னு ஒரு ரூமர் தான். எப்படி இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ. என்னை பொறுத்தவரை எந்த ரூமருக்கு ரியாக்ஷன் கொடுக்கமாட்டேன். நான் சரியாக இருந்தால் அதைபற்றி யோசிக்கக்கூடாதுன்னு என் எண்ணம் என்று ஆர்யா காமெடியாக கூறியுள்ளார்.