ஹீரோயினிடம் முத்தம் கேட்டதாக ஆர்.வி.உதயக்குமார் பேசியுள்ளார். ஆர்.வி.உதயக்குமார் ரஜினிகாந்த் நடித்த எஜமான், விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், கமல்ஹாசன் நடித்த சிங்கார வேலன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில், அண்மையில் கும்பாரி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இதுவரை, விஐபி.,கள் வருகைக்காக தான் விழா காத்திருக்கும். முதன் முறையாக, ஊடக நண்பர்களுக்காக நாங்கள் காத்திருந்தோம்.
சர்ச்சை பேச்சு எத்தனை விழாக்களில் எங்களால் நீங்க எத்தனை கொடுமைகளை சந்தித்திருப்பீர்கள். அதற்காக இன்று பத்திரிக்கையாளர்கள் வெச்சு செய்துவிட்டார்கள். பாடல் பார்த்தேன், ரொம்ப அழகா பண்ணிருக்கார். கும்பாரி என்கிற வார்த்தையே எனக்கு தமிழில் தெரியாது. எனக்கு கும்பாரி என்றால் நட்பு என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ரொம்ப நாள் ஆச்சு ஹீரோயின் கூட உட்கார்ந்து. ரொம்ப வருசம் ஆச்சு. என்னை சுற்றி ஹீரோயின்களாக உட்கார்ந்திருந்த காலம் போய், இப்போ பாருங்க, இந்த பயலுகளா உட்கார்ந்திருக்கானுங்க.
விஜய் விஷ்வா, ஹீரோயினை முதல் முத்தம் கொடுக்கும் போது நன்றாக இருந்தது. இரண்டாவது முத்தம் கொடுக்கும் போது, எனக்கே சூடு ஆனது. அடுத்தடுத்து என்னை பேச அழைத்தார்கள். ஹீரோயின் அருகில் இருந்ததால், அப்புறம் பேசுறேன் என்று தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு ‘கிஸ்’ கொடுத்தால் தான் பேசுவேன் என்று ஹீரோயினிடம் கேட்டேன். ஓகே சார் என்று சொல்லிடுச்சு எனப் பேசியுள்ளார்.