நடிகர் சார்லி சினிமா சம்பந்தமான ஆய்வில் பிஎச்டி பட்டம் பெற்று உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலம் தமிழ் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து பின்னர் நகைச்சுவை கலைஞராக இருந்து வருபவர் தான் நடிகர் சார்லி. இவரின் உண்மையான பெயர் “வேல்முருகன் தங்கசாமி மனோகர்”, இந்த பெயர் சினிமாவிற்குள் சரியாக வராது என கே பாலசந்தர் “சார்லி..” என மாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுமாராக 800 மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சார்லி தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் பிறந்துள்ளார். இவரின் கல்லூரி நாட்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களை பார்த்து விட்டு அந்த காலப்பகுதியில் தான் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டுள்ளார். இதன் பின்னர் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரங்கள் வரை நடித்துள்ளார். இந்த நிலையில் பாலச்சந்தர் இயக்கிய “பொய்க்கால் குதிரை” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவர் சார்லி என அழைக்கப்பட்டார். பொய்க்கால் குதிரை திரைப்படம் சார்லியின் வாழ்க்கையை மாற்றி திரைப்படம் என்று கூட சொல்லலாம். அந்தளவு வரவேற்பை எடுத்து கொடுத்தது. இதனை தொடர்ந்து தான் சார்லி நிறைய படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்தவர் காலங்கள் செல்ல கதாநாயகர்களின் நண்பர் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் 90ஸ் காலப்பகுதிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் சினிமா ஒரு புறம் இருக்கையில் சார்லி ஆனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் பள்ளி ஆசிரியராக இருந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்மார்கள் இருக்கிறார்கள். அந்த காலங்களில் இவர்களின் மகன்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மகன்களை நன்றாக படிக்க வைத்துள்ளார்.
தற்போது இவரின் மகன்கள் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள். குடும்பம் அமெரிக்காவில் இருந்தாலும் சார்லிக்கு சென்னையில் இருப்பது தான் மிகவும் பிடிக்குமாம். இதனால் அடிக்கடி இந்தியா வந்து விடுவாராம். சமீபத்தில் தான் சார்லியின் மகனுக்கு திருமணம் நடந்தது. இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தற்போது சார்லிக்கு 63 வயதாகின்றது ஆனாலும் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கூட சார்லி தான் நடிக்கவிருந்தாராம் பின்னர் தான் வடிவேலுக்கு அந்த வாய்ப்பு சென்றதாக கூறப்படுகின்றது.