தனது திருமணம் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளிப்படையாக பேசியுள்ளார். ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.குறிப்பாக ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார். தன்னுடைய கேரக்டர் மற்றும் கதையை கவனத்தில் கொண்டு இவர் படங்களை தேர்வு செய்கிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து அதிரடி கவர்ச்சியில் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ரம்யா, ஃபோட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.. தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.வருங்கால கணவர் குறித்து பேசிய ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தப் படம் இவருக்கு சிறப்பான அறிமுகமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனியின் ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.இந்தப் படங்களை தொடர்ந்து அடித்தது ஜாக்பாட். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட மாலை நேரத்து மயக்கம் படத்திலும் கமிட்டாகி நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். இந்தப் படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
இந்தப் படம் தமிழிலும் வெளியானது. தான் புதிதாக ஆரம்பித்த மம்முட்டி கம்பெனி மூலம் நடிகர் மம்முட்டி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் ரம்யா பாண்டியன் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தனக்கு படங்களை காட்டிலும் ரியாலிட்டி ஷோக்களே அதிகமான வெளிச்சத்தை தந்ததாக அவர் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இவரது மொட்டை மாடி போட்டோஷுட் மிகவும் பிரபலம். இவரை இந்த போட்டோஷுட்தான் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது.
இதனிடையே, மாடலிங், சினிமா, சமூக வலைதளங்கள், போட்டோஷுட்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன். இவரது அதீத கவர்ச்சியில் அடுத்தடுத்த போட்டோஷுட்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம்தான் இவருக்கு நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய திருமணம் காதல் திருமணம்தான் என்று ரம்யா பாண்டியன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னுடைய வாழ்க்கையில் யாருடனும் தான் கமிட்டாகவில்லை, தான் சிங்கிள்தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒருவரின் லுக் எனக்கு பிடித்தால்தான் அவரை வாழ்க்கைத்துணையாக ஏற்பேன் என்றும் குறிப்பாக அவரது கண்கள் தனக்கு பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமணம் இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய வாழ்க்கையில் யாருடனும் தான் கமிட்டாகவில்லை, தான் சிங்கிள்தான்.ஒருவரின் லுக் எனக்கு பிடித்தால்தான் அவரை வாழ்க்கைத்துணையாக ஏற்பேன். குறிப்பாக அவரது கண்கள் தனக்கு பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.