அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட ரோபோ சங்கரை, மிகவும் பிரபலமாக்கியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிந்து போய் இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திருமி உள்ளார். இதனையடுத்து இவர் தான் அவ்வாறு மெலிந்தமைக்கான காரணம் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பது குறித்தும் முதன் முறையாக ஓப்பனாக பேசி இருக்கின்றார்.
அந்தவகையில் அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருந்த போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்ததாகவும் அதனால் தான் உடல் எடை வேகமாக குறைந்ததாகவும் கூறியுள்ளார். அத்தோடு அந்த சமயத்தில் மருத்துவர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் எல்லாருமே நல்லபடியா பார்த்துக்கொண்டதாகவும், அதனால் தான் சீக்கிரமா பழைய நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “நான் எத்தனையோ பேரை சிரிக்க வைத்து அவர்களது மனக்கஷ்டத்தை போக்கிய என்னுடைய கஷ்டத்தை போக்கியது காமெடி ஷோக்கள் தான். அதிலும் குறிப்பாக ராமர் காமெடிகளை பார்த்து பெட்டில் உருண்டு உருண்டு சிரித்ததாகவும்” கூறி இருக்கின்றார். இவ்வாறு கடந்த நாலு மாசமா காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து நான் திரும்பவும் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார் ரோபோ சங்கர்.