நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படத்தை குறிப்பிட்டு நகைச்சுவை நடிகர் அண்ணாச்சி பேசியுள்ளார். இமான் அண்ணாச்சி சன் டிவியில் குட்டி சுட்டிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இமான் அண்ணாச்சி, இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், இவரது பேச்சினால் ஈர்க்கப்பட்டு இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார். அதில் அவர் “தற்போது வெளியாகும் படங்களில் எல்லாம் ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிகிறது. எந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே காரி துப்புகிறார்களோ
அந்தப் படம் பயங்கர ஹிட் ஆகி விடுகிறது” என்று கூறினார். பேட்டி இதனை தொடர்ந்து, அவர் இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கிய படம் குறித்து பேசுகையில், “மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படமும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போடுகிறது. தற்போது புதிதாக ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி பேசக்கூடிய படத்தை எடுத்தால் அந்த படம் தாறுமாறாக ஓடுகிறது.
இதைப் பார்த்துவிட்டு யார் யார் எந்த சாதியால் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாக இப்போது சாதியை மையமாக வைத்த சமுதாய படத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். மேலும், இது எந்த சமுதாய படம் மேல் தட்டா, கீழ் தட்டா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது. இப்போது தான் தமிழ் சினிமா கெட்டு குட்டிச்செவுராகபோய்விட்டது. இந்த விஷயத்தில் இருந்து தமிழ் சினிமா வெளிவர வேண்டும் என்று ஒரு தமிழனாய் டாப் இயக்குனர்களுக்கும் வளரும் இயக்குனர்களுக்கும் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.