உடல் எடை கூடிவிட்டாரா நடிகை பூஜா ஹெக்டே…! அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க…!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை.

இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும்
நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், பூஜா ஹெக்டே உடல் எடை கூடிவிட்டாரா என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *