சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத நடிகை நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியானது. அதில் படு கவர்ச்சியான லிப் லாக் , படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், ” செக்ஸ் மற்றும் காமத்தைப் பற்றி முதிர்ச்சியடைந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். சின்ன பசங்களுக்கு காமத்தை குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் தவறான தகவல் மற்றும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும் என்று கூறியுள்ளார்.