சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். சின்னத்திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை அஞ்சனா ரங்கன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி முக்கிய பிரபலங்கள் நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் அவரது தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ உள்பட பல நிகழ்ச்சிகளை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். நடிகர் கயல் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு அஞ்சனா ரங்கன் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகி குழந்தை பிறந்த போதிலும் அவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
என்பதும் அவற்றுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் கருப்பு காஸ்ட்யூமில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ’இவ்வளவு அழகாக இருந்தால் எப்படிங்க? நாங்க எல்லாம் எங்கே போகிறது’ என்பது போன்ற பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.