தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.பிரபல திரைப்பட நடிகரான அர்ஜுனனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன். இவர் நாம் அன்றாடம் உண்ணும் பழங்களில் இருக்கும் தோள்களை வைத்து அழகான பைகளை உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார். பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இந்த பைகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற பெயரில் புதிய நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத் நகரில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி விஜய் ஈஸ்வரி, நடிகர் கமலஹாசனின் மகள் அக்சரா ஹாசன், அர்ஜுனனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானைபடத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அர்ஜுனனின் இரண்டாம் மகள் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram