80-களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராக திகழ்ந்தவர் நடிக ராமராஜன். அரை ட்ரெளசரோடு படத்தில் அவர் நடிக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே கூட்டம் அலைமோதும். அப்படி தன்னுடைய ஸ்டைலான நடிப்பு, நடனம், சண்டை உள்ளிட்ட அனைத்தையும் காட்டி முன்னணி நடிகர்களை ஓரங்கட்டியவர் ராமராஜன்.அப்படி அவர் நடிப்பில் மயங்கி போன நளினி சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டார் நடிகை நளினி. 13 ஆண்டுகள் ராமராஜனுடன் வாழ்ந்து வந்த நளினி விவாகரத்து பெற்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் நளினி கொடுத்த ஒரு பேட்டியொன்றில் சுவாரஷ்யமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். ராமராஜன் இரவு 2 மணிக்கு விட்டுக்கு வந்தாலும் ரசசாதம் தான் விரும்பி சாப்பிடுவாராம். ரசத்தோடு அப்பள பூ, ஆம்லைட் தான் அவருக்கு பிடிக்கும் என்றும் திருமணம் முடிந்து முதன் முதலில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தை தான் பார்த்ததாக கூறியிருக்கிறார். மேலும், அந்த படத்தில் ராமராஜன் முழுக்க முழுக்க சட்டையில்லாமல் தான் நடித்திருப்பார்.
அதனால் திரையில் அவரை பார்க்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டே தான் பார்த்ததாகவும் நளினி தெரிவித்திருக்கிறார். வெறும் கூரையில் இருக்கும் தியேட்டரை பார்த்து ராமராஜன் எப்படியாவது ஒரு தியேட்டரை வாங்க வேண்டும் என்று கூறுவாராம். அப்படி அவரை 4 தியேட்டரை உசுப்பேற்றி உசுபேற்றி நளினி வாங்க வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.