இயக்குநர் ஷங்கருக்கு இன்னொரு பெயர் என்ன என்று கேட்டாலே அது பிரம்மாண்ட இயக்குநர் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இவர் ஜென்டில் மேன் என்ற மாஸ் படத்தை கொடுத்து திறமையான இயக்குநர் என்ற பெயரைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து காதலன் என்ற படத்தை எடுத்தார். அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவ்வாறு அடுக்கடுக்காய் பல வெற்றிப்படங்களையும் பிரம்மாண்ட திரைப்படங்களையும் எடுத்து தனக்கான இடத்தை இன்றளவும் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் இயக்கி சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் பாய்ஸ்.
அந்தப் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று குறித்து இயக்குநர் ஷங்கர் பேசிய விடயம் ஒன்று வெளியாகி வருகின்றது. அந்த வீடியோவில், பாய்ஸ் படத்தில் கதாநாயாகியாக நடித்த ஜெனிலியாவுக்கு தமிழ் தெரியாததால் டயலொக் பேப்பரை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து விடுவாராம். அப்படி ஒருநாள் இரண்டு பக்க கடினமான டயலொக் பேப்பரை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டாராம்.இதைப் பார்த்த ஜெனிலியா அழ தொடங்கிவிட்டாராம்.
இதைப் பார்த்ததும் இயக்குநர் ஷங்கருக்கு பதற்றமாகிவிட்டதாம். விசாரித்ததன் பின்னர்தான் தெரியவந்ததாம் டயலொக் பேப்பரைப் பார்த்து அழுதிருக்கிறார் என்று. அதன் பின்னர் இயக்குநர் ஷங்கர்தான் ஜெனிலியாவை சமாதானப்படுத்தி வசனங்களை சொல்லிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்திய் 2 படத்தின் படப்பிடிப்பகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.