தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வருபவர் ஹன்சிகா மோத்வானி இவர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதன் பிறகு விஜய், ஜெயம் ரவி, சூர்யா சிவகார்த்திகேயன் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி மார்க்கெட்டை பிடித்தார். அதன் பிறகு திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடியே இவர் திடீரென தன்னுடைய நண்பரும் பெரிய தொழிலதிபருமான sohail khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
கைவசம் மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி, 105 மினிட்ஸ், மேன், பார்ட்னர், கார்டியன் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார் இந்த படங்களில் மூலம் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார் என ஹன்சிகாவும் அவரது ரசிகர்களும் நம்பி இருக்கின்றனர் இந்த நிலையில் 32 வது பிறந்த நாளை இன்று ஹன்சிகா கொண்டாடுகிறார்.இதனை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துகளை கூறி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அசதி வருகின்றனர்.
இந்த நேரத்தில் நடிகை ஹன்சிகாவின் முழு சொத்து மதிப்பு விவரம் பற்றி தகவலும் கிடைத்துயுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நடிகை ஹன்சிகாவின் சொத்து மதிப்பு தற்பொழுது 45 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது சினிமாவில் சம்பாதிப்பதை ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறாராம் கடந்த வருடம் அவருடைய சொத்து மதிப்பு 40 கோடியாக இருந்ததாகவும் ஒரே வருடத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.