நடிகை ரக்சிதா தனது கணவன் ஆபாச மெசேஜ்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக நடு இரவில் காவல் நிலையம் வரை சென்றிருக்கிறார். பிக்பாஸ் ரக்சிதா பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி
இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்தார். அந்த தருணத்திலும் தினேஷ் ரக்சிதாவிற்கு ஆதரவாகத் தான் இருந்தார். இந்நிலையில், ரக்சிதா தனது முன்னாள் கணவன் தினேஷ் கடந்த சில காலமாக தன் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ்களை
அனுப்பி மிரட்டி வருவதாகவும் நேற்று இரவு மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ரக்சிதாவின் கணவர் தினேஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்திய போது “ரச்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம்” என கூறி விட்டு சென்றிருக்கிறார்.