அபர்ணா பாலமுரளி இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை அவர். இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர்.இவர் சிறு வயது முதல் நடிப்புத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் தனம் திறமையை வெளிக்காட்டி உள்ளார். மேலும் இவர் பரதநாட்டியம் கதக்களி போன்ற பாரம்பரியமிக்க நடனத்தை நன்கு கற்றுத் தெரிந்தவர். மேலும் பாடல் பாடுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். அதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் யாத்ரா தொடரன்ணு இந்த மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஆரம்பமானார்.
இதில் இவருக்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது இதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிகம் பாட வாய்ப்புகள் வரத் தொடங்கின.இந்த படத்தில் இவர் மிகவும் நேர்த்தியுடன் நடிப்பிணை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள திரைப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷ் இந்த பிரதிகாரம் என்ற மலையாள திரைப்படத்தில் பகத் பாசிகளுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அதன் பிறகு தமிழ் தெலுங்கு கன்னட என அனைத்து மொழிகளிலும் இருந்து
இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.அதனைத் தொடர்ந்து தமிழில் எட்டு தோட்டாக்கள் சர்வம் தாள மயம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். மேலும் மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த இவர் 2020 ஆம் ஆண்டு தமிழில் சூர்யா நடித்த வெளியான சூரரை போற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மிகப் பெரிய வெற்றிப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்று புகழின் உச்சிக்கே சென்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை தொடர்ந்து நடித்து வரும் விபரம் சோசியல் மீடியாவிலும் அதே கவனம் செலுத்தி வருகிறார் அதன்படி சோசியல் மீடியாவில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை உலாவ விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் புசு புசு என கும்மென்று நிற்கும் குண்டு மல்லிகை போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.