நடிகை மாளவிகா மோகனன், பாத் ரூமில் அதுவும் பாத் டப்பில் ஆண் நண்பர் ஒருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள், இவர் தான் உங்கள் காதலரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், சமூக வலைதளத்தில் செம்ம ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் இவர், எந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டாலும், அது சில மணிநேரங்களிலேயே வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது தன்னுடைய நண்பர் என ஒருவரின் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். என்னதான் நண்பராக இருந்தாலும், பாத் ரூமில், பாத் டப்பில்…
அவர் மீது சாய்ந்தபடி, கொஞ்சம் ரொமான்டிக்காக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இருப்பதால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், உங்களின் காதலரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மாளவிகா மோகனன் போட்டுள்ள பதிவில்…. நட்பு என்பது கனவுகளால் உருவாக்கப்படும் நபர்களை போல். எப்பொழுதும் உங்கள் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். உங்கள் மோசமான நாட்களில் உங்களில் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள், ஒரு நிமிடம் உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தால் கூட அதை படிக்கக் கூடிய திறமை சாலிகள்.
நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனே உங்களுக்கு கை கொடுக்க ஓடி வருவார்கள், அப்படி ஒரு நபர் தான் இவர்’ என்று கூறி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மாளவிகா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும், ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட்டு நடிப்பதாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் 2013ல் வெளியான பட்டம் போலே என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து நிர்ணயம், தி கிரேட் ஃபாதர் போன்ற மலையாள படத்திலும் கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்து வந்தார். அதன்பின் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி மாலிக் ரோலில் நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.இரு படத்திலும் சரியான வரவேற்பை பெறாமல் மலையாளத்தில் கிறிஸ்டி படத்தில் சுறுவயது நடிகருடன் நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் பிஸியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவரின் பிறந்தநாளில் பாத் டப்பில் இருவரும் உட்கார்ந்தபடி ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை மாளவிகா இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கும் Abhinav என்பவர் தான் அவர். அவருடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
View this post on Instagram