2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் காதல். இந்த திரைப்படத்தில் நடிகராக பரத் நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக சந்தியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் படத்தில் சுகுமார் என்ற நடிகரும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி வைரலானது. இந்த நிலையில் காதல் திரைப்படத்தில் ஒரு காட்சியில் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தற்பொழுது ஆட்டோவில் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திரைப்படத்தில் இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமாக வைரலானது.
அதாவது காதல் திரைப்படத்தில் இவர் பேசிய வசனம் ஜோசியக்காரன் கூறினார் விருச்சிகத்தையும் காந்தத்தையும் சேர்த்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறினார் அதனால் நான் என் பெயரை விறிச்சககாந்த் என மாற்றி விட்டேன். அதேபோல் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் அதன் பிறகு அரசியல், சிஎம் அப்புறம் டெல்லி என ஒரு மாபெரும் வசனத்தை பேசினார். இந்த வசனம் மிகவும் வைரலானது அதுமட்டுமில்லாமல் மீம்ஸ் கிரியேட் அவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது என்பதும்
அனைவருக்கும் தெரிந்ததுதான். விருச்சக காந்த் சில நாட்களுக்கு முன்பு பிச்சை எடுத்ததாகவும் இதனை பார்த்த பலர் அவருக்கு உதவி செய்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது.அதன்பிறகு அவர் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை அதனால் கோவில்களில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு ஆட்டோவில் பரிதாபமாக கண் திறந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரிதாபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.