சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி எப்படி ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
2023ல் சனி பகவான் முறையாக மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி ஆனாலும், 2022ல் சனி பகவான் அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்று, பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் மகர ராசிக்கே திரும்புவார். இதன் காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த ஒரு முக்கிய கிரகப் பெயர்ச்சி நடந்தாலும், அதில் மிகவும் கவனிக்கக்கூடிய கிரகப் பெயர்ச்சியாக விளங்குவது சனிப் பெயர்ச்சி எனலாம்.
அதிக காலம் (இரண்டரை ஆண்டு) ஒரு ராசியில் அமர்ந்து பலன் தரக்கூடியவர் சனி என்பதால் அவர் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். நற்பலன்கள் கிடைக்கும் ராசிகள் – தனுசு, துலாம், கன்னி, மிதுனம், ரிஷபம் ,மேஷம் சனி அதிசார பெயர்ச்சியால் கெடுபலன்கள் பெற உள்ள ராசிகள்
கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வதால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.
அதோடு கடக ராசிக்கு அஷ்டம சனி பலன் உண்டாகும். விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி பலன் உண்டாகும். சிம்ம ராசிக்கு கண்டக சனி பலன் ஏற்படும். சனியால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாத ராசிகள்
கும்பத்திற்கு செல்வதால் தனுசு ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதோடு, மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் சனி கெடுபலனிலிருந்து நிவாரணம் பெற்று பல நன்மைகளை அடைவார்கள்.
இந்த பலன் 2023ல் நடக்க உள்ள சனிப் பெயர்ச்சியின் போதும் பொருந்தும். ஒவ்வொரு முறை வரும் ஏழரை சனிக்கு என்ன பெயர்? ஒவ்வொரு கிரகமும் ஒரு முறை காலசக்கரத்தைச் சுற்றி வர சில காலம் எடுத்துக் கொள்ளும். அதில் சனி பகவான் ஒரு முறை முழுவதுமாக சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும். அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் ஏழரை சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடும்.
அதில் முதல் முறை வருவதற்கு மங்கு சனி என்றும், இரண்டாவது முறை வருவதற்கு பொங்கு சனி என்றும், 3ம் முறையாக வருவதற்கு மரணச் சனி என்றும் குறிப்பிடப்படுகிறது. மங்கு சனி மங்கு சனி என்பது ஒருவரின் ராசிக்கு முதல் தடவை வருவதாகும். முதல் முறை வரும் போது பெரியளவில் சனியின் தாக்கம் இருக்காது.
சொல்லப்போனால் ஏழரை சனி நடப்பது பெரியளவு உணர்வது கூட முடியாத வகையில் எளிதாக கடக்கக்கூடும். சிலருக்கு இந்த ஏழரை சனி காலத்தில் சிறப்பான பொருள் வரவு கிடைப்பதாக இருக்கும். பொங்கு சனி 30 வயதுக்கு மேல் அதாவது வாலிபத்தின் நடுவில் இரண்டாவது முறையாக ஏழரை சனி வருவதற்கு பொங்கு சனி என்று பெயர். இந்த காலகட்டத்தில் ஜாதகரின் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து. சனி பகவானின் ஆட்சி அதிகாரம்,
அல்லது கெடுபலனை சற்று கூடவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இந்த காலத்தில் அதிக கெடுபலனை பெறுபவர்கள் பரிகாரம் செய்து ஆறுதலைப் பெறலாம். இந்த காலத்தில் சனி பல பிரச்னைகள், மோசமான பலன்களைக் கொடுத்தாலும், சனி விடைபெறும் போது மங்காத மகிழ்ச்சியும், செல்வத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டு தான் செல்வார்.
மரணச்சனி ஒருவரின் வாழ்வில் மூன்றாவது முறை ஏழரை சனி வரக்கூடிய காலத்தில் நிச்சயம் அந்த ஜாதகருக்கு உடல் நல பிரச்னைகள், உடல் வலுவிழத்தல் மற்றும் மரணம் தருவதற்கான துயரங்களை அனுபவிக்க வேண்டிய நிலை வரும். அப்போது ஜாதகரின் தசை, புத்தி ஜாதகருக்கு சாதகமற்ற நிலை இருப்பின் அவருக்கு மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
3வது முறையாக மரணச்சனி நடக்கும் போது பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை சரணடையக்கூடிய காலம் என்பதால் எப்போதும் கடவுளை நினைத்து வழிபட்டு முக்தி பெறுவதற்கு வழியைப் பார்க்க வேண்டும். மாகத்திற்குச் சனி வக்ர பெயர்ச்சியாக திரும்புவதால் ஏற்படும் பலன்
2022ம் ஆண்டில் கும்ப ராசிக்கு அதிசாரமாக சென்ற சனி 12 ஜூலை 2022 அன்று திரும்பும் போது தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிகளுக்கு மீண்டும் சனியின் கெடு பலன்கள் ஏற்படும்.
பின்னர் ஜனவரி 17, 2023 அன்று நடக்க உள்ள சனிப்பெயர்ச்சி வரை மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசியினருக்கு சனி பகவானின் கெடுபலன் தொல்லை நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.