குறைவான படங்கள், கவர்ச்சி காட்டாத நடிப்பு, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், சினிமாவிற்கே தகுதி இல்லாத ஒரு முகம் என தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோபா. தன் சினிமா வாழ்க்கையில் 25 படங்களை கூட தாண்டாத நடிகை சோபாவை இன்றைய தலைமுறை நடிகர்கள் கூட புகழ்ந்து வருகின்றன. குழந்தைத் தன்மையான முகம் கொஞ்சும் நடிப்பு இவைதான் அவர் மீது ஒரு ஈர்ப்பை வரவழைத்து இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபா நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் தான் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் ஒரு இரண்டாவது நாயகியாக இருந்தாலும் மற்ற எல்லா ஆர்டிஸ்ட்களை தாண்டி நம் மனதில் வந்து அமர்ந்திருப்பார் நடிகை ஷோபா.
அழியாத கோலங்கள் என்ற படத்தில் டீச்சராக நடித்து ஒரு ஆகச் சிறந்த நடிகையாக தன்னை பிரபலப்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து மூடுபனி என்ற படத்தில் அற்புதமான நடிப்புடன் மாடர்ன் டிரஸ்ஸில் வந்து கலக்கி இருப்பார். இப்படி தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் நடித்துக் கொண்டிருக்க பசி என்ற படம் அவருடைய நடிப்புக்கு தீனி போட்டது.அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு துயரமான சம்பவம் என்னவென்றால் இந்த விருது அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில்தான் நடிகை சோபாவும் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானது.
பத்திரிக்கையில் ஒரு பக்கம் அவர் விருது வாங்கிய செய்தியும் இன்னொரு பக்கம் அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் ஒன்றாக வெளிவந்தன.ஷோபாவை வேறு எந்த நடிகையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு தன்னிகரற்ற நடிகையாக வலம் வந்தார் ஷோபா. இவரைப் பற்றிய சில தகவல்களை பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறும் போது சில சுவாரசியமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். அதாவது சோபாவின் மரணத்தை பற்றி கூறிய காந்தராஜ் அவருடைய மரணம் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது என்று கூறினார்.
அதற்கு காரணம் பாலு மகேந்திராவா என நிருபர் கேட்டதற்கு அது அந்த காலத்தில் அப்படி எல்லாம் சொல்லப்பட்டது என்றும் அவருடைய கேரக்டர் எனக்கு தெரியாது. அதனால் என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் சில ஆபாசமான செய்திகள் எல்லாம் சோபாவை பற்றி வந்தது என்றும் அது அவருக்கு பிடிக்காமல் போனதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளிவந்தது என காந்தராஜ் கூறினார்.ஆனால் ஷோபா அந்த மாதிரி பெண்ணே கிடையாது.
மிகவும் நல்லவர் என்றும் ஒரு படத்தில் கூட அவர் தனது கவர்ச்சியை காட்டாமல் தான் நடித்து வந்தார் என்றும் தன்னுடைய நடிப்பினாலேயே அத்தனை ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் என்றும் காந்தராஜ் கூறினார். அதுமட்டுமில்லாமல் அவர் அவுத்து போட்டு நின்னா கூட யாரும் பார்க்க மாட்டார்கள். அப்படிப்பட்ட முகம் உடையவர் ஷோபா .தன்னுடைய நடிப்பு திறமை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு சினிமாவில் இந்த அளவிற்கு புகழை எடுத்துள்ளார் என்றும் கூறினார்.