விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இதில் முதல் சீசனில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக மிர்ச்சி செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிர்ச்சி செந்தில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜா ரொம்ப அடக்கமான பொண்ணாக நடித்திருப்பார். நான் இவர் நிஜ வாழ்க்கையில் இப்படி தான் இருப்பார் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்.
ஸ்ரீஜா வீட்டில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு என்ன பிடிக்குமோ அது மட்டும் தான் வீட்டில் நடக்கும். சீரியலில் கூட நடிக்கும் நடிகைகளின் உண்மையான கேரக்டர் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று மிர்ச்சி செந்தில் அட்வைஸ் கொடுத்துள்ளார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஸ்ரீஜா நடித்து மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றார். ரீல் ஜோடிகளாக இருந்த செந்தில் – ஸ்ரீஜா குடும்பத்தினரின்
சம்மதத்துடன் 2014ல் காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை செந்தில் வெளியிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீரியல் நடித்த ஸ்ரீஜாவை நம்பி ஏமாந்துட்டேன். ரியல் வாழ்க்கையில் ஸ்ரீஜா வேற. நிஜவாழ்க்கையில் அவர் ரொம்ப ஸ்டிரிட்டான மனைவி என்றும் பல இடங்களில் ஈகோ ஆரம்பித்து சண்டையில் கூட முடிந்ததாகவும் கூறியுள்ளார்.