இயக்குனர் பாலு மகேந்திர இயக்கத்தில் கடந்த 1985 -ம் ஆண்டு வெளிவந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மௌனிகா. பாலுமகேந்திராவின் சினிமா மீது காதல் வயப்பட்ட மௌனிகா அவர் மீதும் காதல் கொண்டார். 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2014 -ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சில வருடங்களில் பாலுமகேந்திரா உடல் நிலை குறைவால் மரணம் அடைந்தார்.இந்நிலையில் மௌனிகா பாலுமகேந்திரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் , பாலுமகேந்திரா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் “என்னுடைய வயது அதிகம் சுமையை உன்னிடம் திணிக்க நான் விரும்பவில்லை இதனால் நாம் பிரிந்து விடுவோம் எனக் பாலுமகேந்திரா கூறினார். ஆனால் இது உண்மையான காரணம் இல்லை.பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர்.
தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா.பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார்.மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திராவின் கருத்து என்ன… இதோ அவரது வார்த்தைகளில்…. “சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை.
இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான். இந்த உறவை (மௌனிகாவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.
வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா.
என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். எதற்காக பிரிந்தோம் என்ற காரணத்தை சொல்லாமலே சென்று விட்டார். அவர் செய்தது மிக பெரிய தப்பு. அவருடைய ஆன்மாவை கூட மன்னிக்க மாட்டேன் என்று மௌனிகா கூறியுள்ளார்.