தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். “திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் தபு குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது
அஜித்தை தபு வெறிக்க வெறிக்க பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். இதை அன்று கிசு கிசுவாக கூட நான் எழுதியிருந்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் பல நடிகைகள் நெருக்கம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். 90ஸ் காலகட்டத்தில் இவருக்கு பெண்கள் ரசிகைகள் அதிகம். அஜித்தை பலரும் காதல் மாமன்னன் என்று தான் அழைப்பார்கள். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்து வந்த போது
நடிகை தபு அஜித்தின் அழகில் மயங்கிவிட்டாராம். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் அப்போதைய பத்திரிகைகளில் வெளியானது. மேலும் அஜித் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் இருந்தார் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.