தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்ற ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.நடிகர் அர்ஜுனின் மகள் அஞ்சனா தொழிலதிபர் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தவர் அர்ஜுன். தமிழ்சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் அர்ஜூன், சமீப காலமாக வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் மூத்த மகளை ஹீரோயினாக்கிய அர்ஜுன், இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் கொண்டுவரவில்லை.
இதற்கு காரணம் அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லையாம். அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் . அதன்படி தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.அந்த ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் பழ தோல்களைக் கொண்டு உருவாக்கி அதனை விற்பனை செய்கிறார். உலகிலேயே அத்தகைய முறையில் தயாரித்து விற்பனை செய்யும் முதல் நிறுவனமாக அஞ்சனாவில் சர்ஜா நிறுவன்ம் விளங்கி வருவதாக கூறப்படுகிறது.ஐதராபாத்தில் நடந்த இந்நிறுவனத்தின்
தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். அர்ஜுன் மகளின் இந்த பிசினஸ் சக்சஸ்புல் ஆக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷாலின் பட்டத்து யானை படத்தில்கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அர்ஜுனனின் இரண்டாம் மகள் தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.