அறுவை சிகிச்சை செய்த காலுடன் ரஜினி பாடலுக்கு Vibe செய்த டிடி- வியந்து போன ரசிகர்கள்…!

அறுவை சிகிச்சைக்கு பின் ரீ என்றி கொடுத்த டிடி ரஜினி பாடலுக்கு வைப் செய்து காணொளி வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி. இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.டிடி தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது 38 வயதாகும் டிடி-க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார். அந்த வகையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகையா டிடி அறுவை சிகிச்சை செய்த காலோடுமனசிலாயோ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த காணொளி டிடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது. இதன் பின்னர் “வேட்டையன்” பட இசை வெளியிட்டு விழாவை டிடி தான் தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *