80 களில் கொடிகட்டி பறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இறந்தபின் அவர் இறுதி பங்குகொண்ட ஒரே நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.90 கிட்ஸ் 2k கிட்ஸ் என யாரை கேட்டாலும் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.1980-ல் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த சில்க் ஸ்மிதா, திரையுலகை தன் வசீகரத்தால் கட்டிப்போட்டவர்.குணசித்ர நடிகையாக சில்க் ஸ்மிதா இருந்த போதிலும் , அவரை திரையுலகம் கவர்ச்சி பொருளாக தான் பயன்படுத்தியது என்றால் மறுக்க முடியாது.அன்றைய காலகட்டத்தில் அவரின் நடனம் இடம் பெறாத படமே இருக்காது,சிலுக்கின் நடனத்தை காணவே. திரையரங்குகளில் கூட்டம் குவியும்புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த அவரின் வாழ்க்கையில் ஏமாற்றங்களும், வலிகளும் மட்டுமே அவருக்கு துணையாய் இருந்தது என்று கூறலாம்.
எவ்வளவு உச்சத்திற்கு சென்றும் சில்க் ஸ்மிதா தனிப்பட்ட வாழக்கை போர் காலமாகவே இருந்தது, மன அழுத்தம், தனிமை என அவரின் வாழ்க்கை பலருக்கு பேசு பொருளாக மாறியது.கொஞ்சல் பேச்சு, காந்த கண்கள், கட்டழகு என வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம் சோகம் நிறைந்தவைதான்.1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சில்க்ஸ்மிதா அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இன்றும் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என அவிழ்க்கப்படாத முடிச்சாகவே உள்ளது.சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா சில்க் ஸ்மிதா குறித்து கூறுகையில், அவரது
இறுதி சடங்கிற்கு திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர் வந்தார் என்றால், அது நடிகர் அர்ஜுன் மட்டும்தான்.சில்க் ஸ்மிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ஒரே நபர் அர்ஜுன் தான் என்றும், அதனுடன் ஒரு சம்பவத்தையும் பகிர்ந்திருந்தார்,சில்க் ஸ்மிதா அர்ஜுனிடம், ‘நான் இறந்து போனால் என் சாவுக்கு நீ வருவாயா’ என்பது போல் கேட்டுள்ளார், இதை கேட்ட அர்ஜுன், என்ன பேச்சு இதெல்லாம் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.பின் சிறிது நாட்கள் கழித்து, சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட அர்ஜுன் அந்த சம்பவத்தின் மூலம் மிகவும் வேதனையடைந்தார் என்று பகிர்ந்து கொண்டார்.