தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளுக்கு இயக்குநராக பணியாற்றய நெல்சன் பின்னர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் வெற்றி படமாக அமையுமா என்று எதிர்பார்த்த நெல்சனுக்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர்,
விஜய்யை வைத்து பீஸ்ட் என்று இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபலமானார். ஏகப்பட்ட நெகடிவ் கமெண்டுகள் சுற்றி வர நெல்சன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திலீப் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெல்சன் மனைவி மோனிஷா தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் நெல்சன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் இருக்கிறார் . சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நெல்சனின் மனைவி மோனிஷா, தற்போது அரை ட்ரவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவியா இது? என்று ஷாக்காகி உள்ளனர்.
View this post on Instagram