90-களில் இளசுகளின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் அரவிந்த் சாமிக்கு ரூ. 160 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிந்த் சாமி. நாயகனாக நடித்து ரசிகர்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக நடித்து மிரட்டினார்.சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடித்த கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் சாமி; 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
அதன்பின் அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இதையடுத்து தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். அரவிந்த் சாமி பிரபல தொழிலதிபரின் தத்து மகன் என்று பரவி வந்தாலும் அதுகுறித்து உண்மையான தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தனிப்பட்ட மற்றும் மனைவியுடன் விவாகரத்து பிரச்சனையால் சினிமாவில் இருந்து 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு விலகினார்.
தந்தை வி டி சுவாமி நடத்தி வந்த கம்பெனிகளை நடத்தி வந்த அரவிந்த் சுவாமி, 2005 ஒரு விபத்தில் சிக்கி முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 4, 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று குணமடைந்து பல தொழில் துறை கம்பெனிகளான, InterPro Global, Talent Maximus துவங்கி நடத்தி வந்தார். Talent Maximus கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் சம்பாதிப்பில் சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு 10 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.