அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து விஜே கல்யாணி வேதனை தெரிவித்துள்ளார். விஜே கல்யாணி தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில் முன்னதாக இவர் அளித்த பேட்டி ஒன்றில், அட்ஜெஸ்ட்மெண்ட் “ பெண்கள் தங்கள் கருத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சொல்ல முன்வர வேண்டும் என நினைக்கிறேன். நான் இது போன்று சொன்ன போது எனக்கு யாரும் ஆதரவாக நினைக்கவில்லை. நான் ஹீரோயினாக நடித்த போது, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என்று என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறார்கள்.அவர்கள் சொல்ல வருவது என் அம்மாவுக்கு புரியவில்லை.
அவர் படத்திற்கு டேட் தானே பார்த்து கொள்ளலாம் என சொல்லிவிட்டார். அதன் பிறகு தான் அவர்கள் அது இல்ல மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு தான், எங்க குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கை முற்றிலும் மாறியது” எனத் தெரிவித்துள்ளார்.