அமலா பால் நடிப்பில் ரத்ன குமார் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளியானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கே எதிர்பார்பை எகிற வைத்தது.ஆடை, டாக்டர், ஜெயிலர் படத்தில் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், ஆடை படத்தில் நிர்வாணகாட்சியை படமாக்கியது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் அந்த பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்று தெரியவேண்டும். அதற்காக ஆபாசமாகவும் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டோம். இதற்காக பல ஆங்கில படத்தை ரெபரன்சிற்காக பார்த்தோம் ஆனால், அது திருப்தியை தரவில்லை. இதனால், முதலில் போட்டோஷூட் செய்து பிளான் போட்டாம். பொருளை வைத்து உடலை மறைப்பது, அவுட் ஆஃப் போகஸில் காட்டுவது, ஓடுவது என இந்த காட்சியைத் காட்ட முடியும்.
இதையே காட்சிகளை எப்படி போர் அடிக்காமல் எப்படி கொடுப்பது என்று முடிவு செய்து, கண்,கை கால் என தனித்தனியாக கிளாசப்ஸ் ஷாட் எடுத்தோம்.ஒரு காட்சியில் அமலா பால், உடையே இல்லாமல் அமர்ந்து இருப்பார். ஆனால், அந்த காட்சியில் கொஞ்சம் கூட ஆபாசமே தெரியாது. அந்த காட்சியை திட்டத்தட்ட 16 பணிநேரம் எடுத்தோம், படப்பிடிப்பு நடக்கும் போது, நான், இயக்குநர், டாலி ஆபரெட்டர், ஸ்டெடி கேம் ஆபரேட்டர், என்னுடைய உதவியாளர் என மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம். அமலா பால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,
அந்த படமே செய்திருக்க முடியாது என்று ஒளிப்பதிவாளர் இந்த தகவலை அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆடை படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், ஆடை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலான விசயம். அந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்தது . அது எங்களுக்கு சவாலாக அமைந்தது. நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்திருக்க முடியாது. அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம் என்று கார்த்திக் கூறியுள்ளார்.