கதாநாயகிகள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து நடிகை சுலோக்சனா பேசியுள்ளார். நடிகை சுலக்ஷனா தமிழ் சினிமாவில் லிஜெண்ட் இயக்குனர்களாக திகழ்ந்து வந்தவர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே பாலசந்தர் போன்ற இயக்குனர்கள். 80களில் இருந்து மக்களை ஈர்க்க தங்களுகான தனி கதையை உருவாக்கி பல நடிகர் நடிகைககளை அறிமுகப்படுத்தினார்கள். தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுலக்ஷனா. பல்வேறு மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இன்று வரை விளங்கி வருகிறார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்கள் பொது இடங்களில் உடை மாற்றுவதில் உள்ள கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகள் எல்லாம் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பக்கமும் புடவையை கட்டி அதற்குள்தான் உடை மாற்றுவோம். ஆதங்கம் பயணத்தில் இருக்கும்போது கூட வண்டியை நிறுத்தி காருக்கு பின்னாலேயே உடையை மாற்றிவிட்டு வருவோம். ஆனால் அப்படியும் கூட அங்கிருக்கும் நபர்கள் நாங்கள் புடவை மாற்றுவதை பார்ப்பதற்கு முயற்சிப்பார்கள்.
நாங்கள் படப்பிடிப்பு தலத்தில் சேலையை நான்கு பக்கங்களிலும் கட்டி அங்கு தான் உடை மாற்றுவோம். சில சமயங்களில் பயணத்தில் இருக்கும் போது வண்டியை நிறுத்திவிட்டு காருக்கு பின்னாடியே உடை மாற்றவோம். அப்போது சிலர் உடை மாற்றுவதை எட்டி எட்டி பார்ப்பாங்க அது ரொம்ப கூச்சமாக இருக்கும் என்று சுலக்சனா கூறியுள்ளார். அந்த அளவிற்கு கதாநாயகிகள் அப்போது கஷ்டங்களை அனுபவித்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.