கடந்த 1980களில் நடிகை சீதா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம், சீதா அறிமுகமானார். முதல் படத்திலேயே, ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் சீதா நடித்தார். குரு சிஷ்யன் படத்தில் பிரபுக்கு ஜோடியாகவும், உன்னால் முடியும் தம்பி படத்தில் கமல்ஹாசனுடன், ராஜநடை படத்தில், விஜயகாந்துடனும் நடித்தார். மல்லுவேட்டி மைனர் படத்தில் சத்யராஜூக்கு ஜோடியாக நடித்தார். ராமராஜன், அர்ஜூன் என அன்றைய நட்சத்திர நாயகர்களுடன் ஜோடியாக நடித்து, சீதா என்றால், அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருந்தார்.
இல்லத்தரசியாக சீதா.. இந்நிலையில், இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் சீதா நடித்தார். அப்போது, சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த, 1989ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தது. திருமணத்துக்கு பின், சீதா சினிமாவில் நடிக்கவில்லை. இல்லத்தரசியாக மாறி, குடும்பத்தை கவனித்துக்கொண்டார்., பார்த்திபன் தொடர்ந்து, படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில், ஹீரோ – ஹீரோயின் ஜோடியாக நடித்த சிலர், இவ்வாறு காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், சில ஆண்டுகளிலேயே அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அப்போதெல்லாம், தமிழ் சினிமாவில் ரியல் ஜோடி என்றால், அது பார்த்தின் சீதா தான். மிக அன்னியோன்னியமாக தம்பதி. எப்போதும், திருமணத்துக்கு முந்தைய காதல் மாறாமல், மறையாமல், குறையாமல் அதே அன்புடன் வாழ்ந்து வருகின்றனர் என, திரையுலகினர் பலரும் பாராட்டி வந்தனர். திருமண வாழ்த்துகளில் கூட, சீதா – பார்த்திபன் போல, நல்ல ஒற்றுமையான தம்பதியாக வாழ வேண்டும் என வாழ்த்துவது வழக்கமாக இருந்தது.
இதற்கெல்லாம், ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருமணமான பத்து ஆண்டுகளுக்கு பிறகு, சீதா – பார்த்திபன் மணவாழ்வு முறிந்து, இருவரும் பிரிந்தனர், பார்த்திபனை விட்டு பிரிந்துவந்த சீதா, தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.அப்போது, உடன் நடித்த சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை, சீதா மறுமணம் செய்துகொண்டார், ஆனால், அதுவும் சில ஆண்டுகளில் பிரிவை ஏற்படுத்தியது. இப்போது சீதா, தனியாக இருக்கிறார். ஆனால், சீதா மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தும் முக்கிய வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. மதுர படத்தில் கூட அவரது நடிப்பு, ரசிக்கும்படியாகவே இருந்தது.
இப்போது சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் சீதா, அடிக்கடி தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை பறிப்பது, பிராணிகளை கொஞ்சுவது போன்ற வீடியோக்களை பதிவிடுகிறார். நான் அந்த தப்பை செய்திருக்க கூடாது.சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசிய நடிகை சீதா, ஒரு காலத்தில், சினிமாவில் முன்னணி வரிசையில், முக்கிய நடிகையாக வலம் வந்தேன், பல முக்கிய ஹீரோக்களுடன் நடித்தேன். அந்த வேளையில், பார்த்திபனை திருமணம் செய்தேன். அவருக்கு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியதால், நான் நடிப்பை பாதியில் விட்டு விட்டேன்.
அந்த தப்பை நான் செய்திருக்க கூடாது.ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தை இழந்துவிட்டால், தொலைத்து விட்டால், மற்றவர்களுக்காக அதை விட்டுக்கொடுத்தால், மீண்டும் பழைய அடையாளத்தை பெறுவது மிகவும் சிரமம். அப்படி, நல்ல நடிகை என்ற என்னுடைய அடையாளத்தை அழித்தது பார்த்திபன்தான், என வெளிப்படையாக கூறி இருக்கிறார் சீதா. காலம் முழுவதும் துணை வருவார் என்று நம்பித்தான், பார்த்திபனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, சீதா தன் நடிப்பை நிறுத்திக்கொண்டார். ஆனால், இன்று அந்த வாய்ப்புக்காக அவர் போராடி வருகிறார் என்பதுதான் கசக்கும் உண்மை.