சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் டான்சராகவும் மேக்கப் ஆர்ட்டிஸ் ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ரேமா அசோக். ஆரம்பத்தில் நடன கலைஞராக திகழ்ந்து கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று டான்சராக இருந்து வந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், டான்சர்களுக்கு நடக்கும் அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. டான்சர்கள் மற்றும் பாடகர்களை கோயில் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவார்கள்.
அப்போது பாடகர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட எல்லாமே கொடுப்பார்கள். ஆனால் டான்சர்களுக்கு உணவுக்கூட கொடுக்க மாட்டார்கள். ஏன் பலர் கூடி இருக்கும் பொது இடத்தில் தான் ஸ்க்ரீன் கட்டி துணியை மாற்றனும். ரூம் கூட கொடுக்கமாட்டாங்க என்று கூறியுள்ளார். பாடகர்களுக்கு கொடுக்கும் மரியாதை டான்சர்களுக்கு இல்லை என்றும் அதுவும் பெண்களுக்கு இல்லை. டான்ஸ் ஆடினால் எங்களை
இழிவாகவும் தரைகுறைவாகவும் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஊ சொல்றியா மாமா, காவாலா பாடல்களை பாடிய பாடகர்களை புகழ்ந்தும் ஆட்டம் போட்ட டான்சர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். இந்த நிலைமை சமந்தாவுக்கே என்றால் எங்களை போன்ற சின்ன டான்சர்களுக்கு மோசமாக தான் இருக்கும் .