அதை பண்ணுவது தவறில்லை,என்னால் பண்ண முடியுமானு கேட்டா…? பிக்பாஸ் லாஸ்லியா ஓபன் டாக்…!

Spread the love

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற இவர் அழகில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை அளித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, முகின் ராவ், தர்ஷன் என ஆண் நண்பர்களுடன் இயல்பாக பழகினார்.அதுமட்டுமில்லாமல், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த லாஸ்லியா அப்பா அவரை,கண்டபடி திட்டிதீர்த்தார்.

இதையடுத்து, கவின் அந்த நிகழ்ச்சியிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேறினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொள்ளவே இல்லை. இதற்கு முன் இலங்கையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால் லாஸ்லியாவிற்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கூகுள் குட்டப்பா மற்றும் பிரெண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு லாஸ்லியா பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவரிடம் “உங்களை பொறுத்தவரை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாஸ்லியா “என்னைப் பொறுத்தவரை நான் அதை பண்ணுவேனா என்று தெரியவில்லை.ஏனென்றால் நான் வளர்ந்தது கிராமத்தில் தான். அங்கிருந்து வந்ததினால் எனக்கு தெரியவில்லை. அதை பண்ணுவது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், என்னால் அதை பண்ணமுடியுமா என்று கேட்டால், கேள்வி குறிதான்” என்று லாஸ்லியா பேசியுள்ளார்.

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *