தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பாப்புலர் நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து பிரபல நடிகையாக வலம் வந்தார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த லட்சமி மேனன், தற்போது லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லட்சுமி மேனன், தொப்பையை காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
View this post on Instagram