ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும்
என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.இசையமைப்பாளர் நடிகர் என அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷின் தங்கைதான் பவானி ஸ்ரீ. மாடல் மற்றும் நடியாக வலம் வந்த இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு வெப் சீரியஸில்தான்.அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகளும் ஆவார். இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு ‘விடுதலை’யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என ஒரு நேர்காணாலில் கேட்கப்பட்டபோது, அவர் இல்லை என மறுத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை பவானி ஸ்ரீ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாகவும் இருந்து வரும், இவர் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது, வியப்பாகவும் விடுதலை படத்தில் நடித்துள்ளது இவரா? எனவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.அந்த வகையில் மாடலாக இருக்கும் நடிகை பவானி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், பாவானி இவ்வளவு அழகாக இருப்பாங்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.